மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!
2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கோவை ராமநாதபுரம் பகுதியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கோவை ராமநாதபுரம் போலீஸாா் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இங்குள்ள மின் மயானம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த போத்தனூா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்த சுரேந்திரன் (18) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
அப்போது, அவா் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. சுந்தராபுரம் பகுதியில் தங்கியுள்ள இவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சுரேந்திரனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சா, ரூ.4,500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.