கழுகார் : `கன்ட்ரோலில் சொத்துகள்’ - ஆளும் தரப்பிலிருந்து `சின்ன தலைவி’க்கு ஆதரவு...
Skin Cancer: "உங்கள் தோலைப் பரிசோதியுங்கள்" - மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு ஆறாவது முறையாக தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், ஆறாவது முறையாக தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இம்முறை, அவரது மூக்கிலிருந்து பாதிக்கப்பட்ட திசு அகற்றப்பட்டது.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கிளார்க், “தோல் புற்றுநோய் உண்மை. இன்று என் மூக்கிலிருந்து இன்னொரு பாதிப்பு அகற்றப்பட்டது. உங்கள் தோலைப் பரிசோதிப்பதற்கான நட்பான நினைவூட்டல் இது. வருமுன் காப்பதே சிறந்தது.

முறையான பரிசோதனையும், ஆரம்பத்திலேயே கண்டறிதலும் முக்கியம். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்த என் மருத்துவருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் கிளார்க், தனது நாட்டுக்காக 115 டெஸ்ட், 245 ஒருநாள் (ODI) போட்டிகளிலும், 34 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அணியின் கேப்டனாக இருந்து, 2015 உலகக் கோப்பையை வெல்லச் செய்ததுடன், 2013–14 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை 5–0 என வீழ்த்தியுள்ளார்.
2006-இல் முதன்முதலாக கிளார்க்கிற்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் 2023-இல் நெஞ்சுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், அப்போது 27 தையல்கள் போடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தோல் புற்றுநோய்
தோல் புற்றுநோய் என்பது, அசாதாரணமாக வளரும் தோல் செல்களால் ஏற்படும் ஒரு வகை புற்றுநோய். சூரிய கதிர்களில் உள்ள அல்ட்ரா வைலட் (UV) கதிர்கள் அல்லது டேனிங் படுக்கைகள் (tanning beds ) இதற்குக் காரணமாக அமைகின்றன.
உலகளவில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய்களில் இதுவும் ஒன்று. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் முழுமையாகக் குணப்படுத்தும் வாய்ப்பு அதிகம்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அதிகளவில் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது. அதிக UV கதிர்வீச்சு, பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள புவியியல் அமைவு, மேலும் வெளிர் நிறத் தோலுடைய மக்கள் பெரும்பான்மையாக இருப்பது ஆகியவைக் காரணங்களாகக் கூறப்படுகிறது.
சராசரியாக மூன்று ஆஸ்திரேலியர்களில் இருவர், 70 வயதிற்குள் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...