ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?
"சச்சின் என் சகோதரரை விட பெரியவர் எனவும் கூற முடியாது!"- வினோத் காம்ப்ளியின் சகோதரர்
முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார்.
இப்போது அவர் மும்பையிலுள்ள அவருடைய இல்லத்தில் இருப்பதாகவும், அங்கு அவர் குணமடைந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

வினோத் காம்ப்ளியின் சகோதரரான விரேந்திர காம்ப்ளி, சச்சினுக்கும் வினோத் காம்ப்ளிக்கும் இடையேயான நட்பு குறித்தும், இவர்கள் தொடர்பாகப் பரப்பப்படும் வதந்திகள் தொடர்பாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர், "என் சகோதரருக்கும் சச்சினுக்கும் ஒரே மாதிரியான திறமைதான் இருந்தது. என் சகோதரர் சச்சினை விட பெரியவர் என்றோ, சச்சின் என் சகோதரரை விட பெரியவர் என்றோ சொல்ல முடியாது.
இருவரும் ஒரே மாதிரி இருந்தார்கள். வினோத் எப்போதும் தான் சச்சினை விட சிறந்தவன் என்று சொன்னதை நான் கேட்டதில்லை.
சச்சின் எப்போதும் வினோத்தை ஆதரித்து வந்தார். அவர்களின் நட்பு இன்னும் மிகவும் வலுவாக இருக்கிறது.

சச்சின், ஆண்ட்ரியாவை (வினோத் காம்ப்ளியின் மனைவி) அழைத்து வினோத்தின் நலம் விசாரிப்பார். சச்சின் அவருக்கு மிகவும் நெருக்கமானவர். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் ரஞ்சி ட்ரோபி போட்டிகளைப் பார்க்கச் சென்றபோது அவர்களை ஒன்றாகப் பார்த்தேன்.
நான் டிரஸ்ஸிங் ரூமுக்கு சாப்பிடச் செல்வேன், அங்கு சச்சின், வினோத், நான் மூவரும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாக இருப்போம். நாங்கள் கிண்டல் செய்து, நல்ல நேரத்தைச் செலவிடுவோம்." என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...