"பிரதமர் MODI அவர்களே... STALIN அங்கிள்" | TVK Madurai மாநாட்டில் Vijay-ன் Fiery...
ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஆக.19 ஆம் தேதி முதலான அவரது இந்த 3 நாள் பயணத்தில், இந்தியா-ரஷியா அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் (ஐஆா்ஐஜிசி-டிஇசி) 26-வது அமா்வு நேற்று (ஆக.20) நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, அந்த அமர்வுக்கு ரஷியாவின் துணைப் பிரதமா் டெனிஸ் மாண்டுரோவுடன் இணைந்து, ஜெய்சங்கா் தலைமைத் தாங்கினார்.
பின்னர், ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் சொ்ஜெய் லாவ்ரோவை இன்று (ஆக.21) நேரில் சந்தித்து அவர் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து, தனது எக்ஸ் தளப் பக்கத்தில், வர்த்தகம், முதலீடு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து உரையாடியாதாகக் கூறியுள்ளார்.
மேலும், உக்ரைன், ஐரோப்பியா, ஈரான், மேற்கு ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைக் குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் 3 நாள் அரசு முறைப் பயணம் இன்றுடன் முடிவடையும் நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னதாக, ரஷியாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்வதால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு, அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதித்திருந்தது. இத்தகையச் சூழலில், அமைச்சர் ஜெய்சங்கரின் ரஷிய பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!