மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போர...
Ronaldo: ரொனால்டோவுக்கு விரைவில் திருமணம்; நிச்சயதார்த்த புகைப்படத்தைப் பகிர்ந்த காதலி
கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்ட நாள் காதலியை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

தனது கால்பந்து பயணத்தை இங்கிலாந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியை அடித்தளமாகக் கொண்டு தொடங்கினார்.
தற்போது அல் நஸர் அணிக்காக விளையாடி வருகிறார். இதனிடையே ரொனால்டோவும்- ஜார்ஜியானாவும் நட்பாக பழகி வந்தனர்.
பின்னர் அது காதலாக மாறியது. இவர்கள் இருவரும் நீண்ட காலமாக லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 5 குழந்தைகள் இருக்கின்றன.
இந்நிலையில் திருமண நிச்சயதார்த்த மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படத்தை ஜார்ஜியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...