செய்திகள் :

`Please help...' - பிரதமர் மோடிக்கு ஐந்து வயது சிறுமி எழுதிய கடிதம் வைரல் - பின்னணி என்ன?

post image

பெங்களூரு நகரின் போக்குவரத்துப் பிரச்னைகளை எடுத்துரைக்கும் ஐந்து வயது சிறுமியின் கடிதம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தக் கடிதம், பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் ’மெட்ரோவின் மஞ்சள் பாதை’ திறப்பு விழாவிற்கு வருகை தந்தபோது எழுதப்பட்டிருக்கிறது.

சிறுமியின் தந்தை அபிரூப் சாட்டர்ஜி இந்தக் கடிதத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்.

Prime Minister Modi inaugurated the Yellow Line of Metro -

அந்த கடிதத்தில் "நரேந்திர மோடி ஜி, இங்கு நிறைய போக்குவரத்து நெரிசல் உள்ளது. நாங்கள் பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு செல்ல தாமதமாகிறது. பாதைகள் மிகவும் மோசமாக உள்ளன. தயவு செய்து உதவுங்கள்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவு இணையத்தில் வைரலானது.

இதேபோல் 2023ஆம் ஆண்டு, 13 வயது சிறுமியான அஸ்மி சப்ரே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திருந்தார்.

பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைகளை எடுத்துரைக்கும் இந்த சிறுமியின் கடிதம், நகரவாசிகளின் நீண்டகால கவலைகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

பெங்களூருவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘மஞ்சள் மெட்ரோ லைன்’ ஆகஸ்ட் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனால், சுமார் 30 சதவிகிதம் வரை கார் மற்றும் பஸ்கள் போக்குவரத்து குறையும் என மதிப்பிடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bumpiest flight routes: விமானத்தில் திடீரென ஏற்படும் குலுக்கல்களால் திணறும் விமானிகள்- பின்னணி என்ன?

கடந்த வாரம், அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் இருந்து ஆம்ஸ்டர்டாமிற்கு சென்ற டெல்டா விமானம் கடுமையாக குலுங்கியதால், பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகிவிடும் என அச்சமடைந்துள்ளனர்.மோசமான வானிலை மாறுப... மேலும் பார்க்க

பணமோசடி வழக்கில் சிக்கிய மகனை பாதுகாக்க சட்டம் பயிலும் 90 வயதான தாய் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிக்கொண்ட மகனை பாதுகாப்பதற்காக 90 வயதான தாய் ஒருவர் சட்டம் கற்றுக்கொண்ட சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.ஹீ என்ற 90 வயதான தாய் தனது 57 வயதான மகன் லின்னை பாதுகா... மேலும் பார்க்க

Raksha Bandhan: 1500 மாணவிகளின் ராக்கி கயிறுகளால் திகைத்த ஆசிரியர்; வைரல் வாத்தியார் Khan sir யார்?

பீகார் மாநிலம் பாட்னாவில் இயங்கி வருகிறது Khan GS Research Centre. இந்த நிறுவனத்தின் நிறுவனர், இயக்குநர் கஃபைசல் கான், மாணவர்களால் 'கான் சார்' என அழைக்கப்படுகிறார். SSC, Railway, UPSC போன்ற அரசு வேலை ... மேலும் பார்க்க

”விராட் கோலி பேசுறேன்...” சிறுவர்களுக்கு வந்த கிரிகெட் நட்சத்திரங்களின் அழைப்பு - பின்னணி இதுதான்

சர்வதேச கிரிக்கெட் வீரர் ரஜத் பட்டிதாரின் தொலைபேசி எண் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் சிறுவர்களுக்கு சென்றதையடுத்து பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் சத்த... மேலும் பார்க்க

`16 வயதில் மகளுக்கு செக்ஸ் பொம்மை கொடுக்க விரும்பியது ஏன்?’ - நடிகை கெளதமி கபூர் விளக்கம்

தாம்பத்தியம் குறித்து அதிகமான பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் பேசுவதில்லை. ஆனால் பாலிவுட் மற்றும் டிவி நடிகை நடிகை கெளதமி கபூர் தனது மகளுடன் இது குறித்து 16வது வயதிலேயே பேசியதாக ரியாலிட்டி ஷோ ஒன்றில் கல... மேலும் பார்க்க