செய்திகள் :

`கணவனுக்கு கவுன்டிங் குறைவு' - வாரிசுக்காக பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த குடும்பத்தினர்

post image

குஜராத் மாநிலம் வதோதரா அருகே வசிக்கும் ரஞ்சன் (பெயர் மாற்றம்) என்பவர் மகனுக்கு திருமணமான நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் சிகிச்சை எடுத்து வந்தனர்.

தற்போது ரஞ்சன் மீது, அவரது 40 வயது மருமகள் போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புகாரில், ''கடந்த ஆண்டு எனக்கு திருமணமாகி கணவர் வீட்டிற்கு சென்றேன். சில மாதங்களில் எனது மாமனார் மற்றும் மாமியார் என்னிடம் உனக்கு வயதாகிவிட்டதால் குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்றும், அதனால் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர். ஆனால் எனது கணவரின் விந்துவை சோதனை செய்து பார்த்ததில் அதில் கவுன்டிங் குறைவாக இருந்தது.

எனவே அவரால் எனக்கு குழந்தை கொடுக்க முடியாது என்ற ஒரு நிலை ஏற்பட்டது. செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நடந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. எனவே, மேற்கொண்டு சிகிச்சை வேண்டாம் என்றும், குழந்தை ஒன்றை தத்து எடுத்துக்கொள்ளலாம் என்றும் நான் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நான் எனது அறையில் உறங்கிக்கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த எனது மாமனார் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். அதனை எதிர்த்து சத்தம் போட்டதற்கு என்னை அடித்துவிட்டார்.

இது குறித்து எனது கணவரிடம் காலையில் தெரிவித்தபோது, எனக்கு குழந்தை வேண்டும், எனவே அமைதியாக இரு என்று கூறி என்னை அமைதிபடுத்தினார்.

அப்படி எதாவது புகார் செய்ய நினைத்தால் எனது ஆபாச படங்களை வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டினார். அதனை தொடர்ந்து பல முறை எனது மாமனார் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். ஆனால் குழந்தை உண்டாகவில்லை. இதையடுத்து எனது கணவர் சகோதரியின் கணவர் திடீரென ஒரு நாள் எனது அறைக்குள் வந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். அதன் பிறகு அவர் அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததில் நான் கர்ப்பமானேன். ஆனால் எனக்கு கருத்சிதைவு ஏற்பட்டு விட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெங்களூரு: குடும்பத்திற்குள் குறுக்கிட்ட மாமியார்; கொன்று 19 துண்டுகளாக வெட்டி வீசிய டாக்டர் மருமகன்

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள தும்குரு மாவட்டத்தில் உள்ள சிம்புகனஹள்ளி என்ற கிராமத்தில் நாய் ஒன்று மனித கை ஒன்றை வாயில் கவ்வியபடி தெருவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இதைக் கவனித்த பொதும... மேலும் பார்க்க

பழனி: மகளுக்கு திருமணம் நடக்காததால் விரக்தி; மகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை; என்ன நடந்தது?

பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியைச் சேர்ந்தவர்கள் பழனியப்பன் - விஜயா தம்பதி. கட்டித் தொழிலாளர்களான இவர்களுக்கு கார்த்திகா, தனலட்சுமி என்ற 2 மகள்களும், நல்லசாமி என்ற மகனும் உள்ளனர். கார்த்திகா, நல்லசாமிக்... மேலும் பார்க்க

பழனி அருகே தனியார் செங்கல் சேம்பரில் ஊழியர் கொலை; சிறுமி உட்பட மூவர் கைது; பின்னணி என்ன?

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த தும்பலபட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான செங்கல் தயாரிக்கும் சேம்பர் இயங்கி வருகிறது. இந்தச் சேம்பரில் கணக்கராக வேலை செய்து வந்தவர் சரவணன் (23). நேற்று முன் தினம... மேலும் பார்க்க

கோவை: கடைக்குச் சென்ற 6 வயது சிறுவனைத் தாக்கிய கரடி; சடலமாக மீட்ட வனத்துறை; வால்பாறையில் சோகம்

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்தத் தோட்டங்கள் காடுகளை ஒட்டியே இருப்பதால் அங்குக் கடந்த சில ஆண்டுகளாக மனித – விலங்கு மோதல் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின... மேலும் பார்க்க

சென்னை: பெண் ஊழியருக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!

சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் 19 வயதன இளம்பெண். இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 10.08.2025-ம் தேதி அந்த இளம்பெண் வேலைக்கு புறப்பட்டார். ராயப்பேட்டையில... மேலும் பார்க்க

பழனி: செங்கல் சேம்பரில் வாலிபர் மர்ம சாவு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தும்பலபட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 23) , இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் செங்கல் சேம்பரில் வேலை செய்து வருகிறார். இந்த சேம்பரில் வடமாநில இளைஞர்கள் பலர் பணிபுரிந்... மேலும் பார்க்க