திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம்!
என் தகுதி கடவுளுக்குத் தெரியும்: சிறகடிக்க ஆசை நாயகி கோமதி பிரியா
வேண்டியது கிடைக்கவில்லை என்றால் அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை என்றும், நமது தகுதி என்ன? என்பது கடவுளுக்குத் தெரியும் எனவும் நடிகை கோமதி பிரியா பதிவிட்டுள்ளார்.
தொடர் படப்பிடிப்பு, நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்பது என தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கும் கோமதி பிரியா, நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணங்கள் செல்வதில் நாட்டம் கொண்டவராக உள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில் நாயகியாக கோமதி பிரியா நடித்து வருகிறார். இதோடுமட்டுமின்றி மலையாளத்தில் மகாநதி என்ற தொடரிலும் நாயகியாக நடித்து வருகிறார்.
இரு தொடர்களில் நாயகியாக நடித்து வருவதோடு மட்டுமின்றி, தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மறுஉருவாக்க நிகழ்ச்சியில் சமையல் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார்.
இதனால், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் என மூன்று மாநிலங்களுக்கும் படப்பிடிப்புக்காக தொடர்ந்து பறந்துகொண்டிருக்கும் நடிகையாக கோமதி பிரியா மாறியுள்ளார்.
எனினும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணங்கள் செல்வதில் ஆர்வம் கொண்டவராக உள்ளார். அந்தவகையில் கேரளத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள ஜடாயு பாறை கோயிலுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

ஆளரவமற்ற உச்சியில் இயற்கையை ரசிக்கும் வகையில் விடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, சில நேரங்களில் உங்களுக்குத் தேவையானவற்றை வாழ்க்கை கொடுக்காமல் இருக்கலாம். அதன் காரணம் அதற்கு நீங்கள் தகுதியற்றவர்கள் என்பது அல்ல; கடவுளுக்குத் தெரியும் உங்களுக்குத் தகுதியானது எது என்று எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | காத்து வாக்குல ரெண்டு காதல் சீரியலுக்கு கிடைத்த அங்கீகாரம்!