திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம்!
இதற்காகக் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி: பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்குத் தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்தியளவில் பிரபல நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. ராதே ஷியாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கின் முன்னணி நடிகையான இவர் தமிழில் பீஸ்ட், ரெட்ரோ திரைப்படங்களில் நடித்தார்.
ரெட்ரோ திரைப்படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியதுடன் ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்தார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பூஜா ஹெக்டே, “பாலிவுட்டில் ஒரே மாதிரியாக கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்கவே அழைக்கின்றனர். நான் நடித்த தென்னிந்திய திரைப்படங்களை அவர்கள் பார்ப்பதில்லை. முக்கியமாக, தமிழில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தில் எனக்கு முற்றிலும் வேறொரு தோற்றத்தை கார்த்திக் சுப்புராஜ் அளித்தார்.
நான் நடித்த ராதே ஷியாம் படத்தைப் பார்த்தவர், என்னால் ருக்மணி மாதிரியும் நடிக்க முடியும் என நம்பினார். அதுதான் நல்ல, திறமையான இயக்குநருக்கான அடையாளம். இதற்காக, நான் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி சொல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கூலி அலெலே போலேமா-க்கு என்ன அர்த்தம்?