டி20களில் அதிக ரன்கள்... விராட் கோலியை முந்திய டேவிட் வார்னர்!
இந்திய வீரர் விராட் கோலியை டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து ஆஸி. வீரர் டேவிட் வார்னர் முந்தியுள்ளார்.
டேவிட் வார்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஜூன் 25, 2024-இல் தனது ஓய்வை அறிவித்தார்.
தற்போது, லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். அதன்படி, இங்கிலாந்தில் தி ஹண்டர்ட்ஸ் எனும் தொடரில் விளையாடி வருகிறார்.
லண்டன் ஸ்பிரிட் அணிக்காக விளையாடும் டேவிட் வார்னர் கடைசி இரண்டு போட்டிகளில் 70, 71 ரன்கள் குவித்தார்.
அதில் கடந்த போட்டியில் விளையாடும்போது 71 ரன்கள் எடுத்தபோது அவர் விராட் கோலி ரன்களை முந்தினார்.
இதன்மூலம், டேவிட் வார்னர் அதிக ரன்கள் குவித்த டி20 பேட்டர்களில் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் கிறிஸ் கெயில் 14, 562 ரன்களுடன் இருக்கிறார்.
அதிக ரன்கள் குவித்த டி20 பேட்டர்கள்
1. கிறிஸ் கெயில் - 14, 562 ரன்கள்
2.கைரன் பொல்லார்டு - 13,854 ரன்கள்
3. அலெக்ஸ் ஹேல்ஸ் - 13,814 ரன்கள்
4. சோயிப் மாலிக் - 13, 571 ரன்கள்
5. டேவிட் வார்னர் - 13,545 ரன்கள்
6. விராட் கோலி - 13, 543 ரன்கள்