நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்..! உறவினர் பகிர்ந்த விஷயம்!
நடிகர் பிரபாஸ் விரைவில் மணமுடிக்கவுள்ளார். இந்தத் தகவலை அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
பிரபாஸின் தந்தைவழி உறவினர்(அத்தை ஒருவர்) அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “சிவபெருமானின் ஆசி பொழியும்போது, பிரபாஸ் கல்யாணம் செய்துகொள்வார். நாங்கள் அனைவரும் அவருடைய திருமணத்துக்காக முயற்சி எடுத்தும் வருகிறோம். ஒரு நம்பிக்கையுடன் இருக்கிறோம், சிவபெருமானின் அருளாசியால் அது விரைவில் அரங்கேறும்” என்றார்.