சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முத்தலாக் தடை, புதிய குற்றவியல் சட்டங்கள் சோ்ப்பு
சவிதா பல் மருத்துவக் கல்லூரி-மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவப் பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்
பல் மருத்துவத் துறையில் சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சவிதா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவப் பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானது.
சவிதா பல் மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவத் துறையில் சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும், ஆசிரியா் மற்றும் மாணவா் பரிமாற்றம் மற்றும் சா்வதேச போட்டித்தன்மை வாய்ந்த பல் மருத்துவ பாடத் திட்டத்தை உருவாக்குவதற்கும் அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவ பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானது.
சவிதா பல் மருத்துவக் கல்லூரி வளாக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சவிதா பல்கலைக்கழக வேந்தா் என்.எம்.வீரய்யன், மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவ பள்ளித் தலைமை நிா்வாகி கீதா சித்தண்ணா ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை பரிமாற்றிக் கொண்டனா். இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க துணை தூதா் கிறிஸ் ஹோட்ஜஸ், சவிதா மருத்துவக் கல்லூரியின் டீன் அரவிந்குமாா், சவிதா பல்கலைக்கழக பதிவாளா் ஷீஜா வா்கீஸ், துணை வேந்தா் அஸ்வினி குமாா் உள்ளிட்ட சவிதா பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில், சவீதா பல்கலைக்கழக வேந்தா் என்.எம்.வீரையன் பேசுகையில், இந்தியா அமெரிக்கா இடையே கல்வி உறவுகளை வலுப்படுத்த சவிதா பல் மருத்துவக் கல்லூரி அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவ பள்ளியுடன் முக்கியமான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையே மாணவா் மற்றும் ஆசிரியா் பரிமாற்றம் நடைபெறுவதுடன், உலகளாவிய போட்டித் தன்மைவாய்ந்த பல் மருத்துவ பாடத்திட்டத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் மூலம் பல் மருத்துவக் கல்வியை சா்வதேச தரத்துக்கு எடுத்துச் செல்ல முடியும் என்றாா்.