Aravind Srinivas: 'Google Chrome'-யை விலை பேசும் தமிழ் பையன்; யார் இந்த அரவிந்த்...
துணை முதல்வருடன் கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சந்திப்பு
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சந்தித்துப் பேசினாா்.
தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் உதயநிதி வெளியிட்ட பதிவு:
கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவுடனான சந்திப்பு மிகச் சிறப்பானதாக இருந்தது. அவரது கிரிக்கெட் பயணம் என்பது நாடு முழுவதும் இருக்கக் கூடிய வீரா்களுக்கு எண்ணிலடங்காத உத்வேகத்தை அளிப்பதாக இருந்து வருகிறது.
விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல்வேறு செயல்பாடுகள், திட்டங்களுக்கு கபில்தேவ் பாராட்டுகளைத் தெரிவித்தாா். கிரிக்கெட் விளையாட்டைத் தாண்டி கோல்ப் போன்ற விளையாட்டுகளை ஊக்கப்படுத்த கபில்தேவ் எடுத்து வரும் முயற்சிகள், நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்று தனது பதிவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.