இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல்...
ஒருநாள் தரவரிசையில் ரோஹித் 2-ஆவது இடம்..! டாப் 10-இல் 4 இந்தியர்கள்!
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த ரோஹித் சர்மா (38 வயது) டெஸ்ட், டி20 போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.
ரோஹித் சர்மா மீதமிருக்கும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி, 2027 உலகக் கோப்பையை வெல்ல கனவோடு இருக்கிறார்.
சமீபத்தில் ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியைத் தொடங்கினார்.
இந்நிலையில், ஐசிசி தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தானின் பாபர் அஸாம் மோசமாக விளையாடியதன் விளைவாக அவரது புள்ளிகள் குறைந்ததால் ரோஹித் முன்னேற்றம் கண்டுள்ளார்.
இந்தியாவின் ஷுப்மன் கில் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். 8ஆவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் இருக்கிறார். மொத்தமாக டாப் 10-இல் இந்தியர்கள் இருக்கிறார்கள்.
ஐசிசி ஒருநாள் தரவரிசை
1. ஷுப்மன் கில் - 784 புள்ளிகள்
2. ரோஹித் சர்மா - 756 புள்ளிகள்
3. பாபர் அஸாம் - 751 புள்ளிகள்
4. விராட் கோலி - 736 புள்ளிகள்
5. டேரில் மிட்செல் - 720 புள்ளிகள்