மியான்மர் வான்வழித் தாக்குதலில் சிக்கிய நிவாரணக் குழு! 8 பேர் பலி!
பாடகர் பாட்ஷாவின் கேளிக்கை விடுதி மீது தாக்குதல்: ஒருவர் கைது!
சண்டிகரில் பிரபல ராப் பாடகர் பாட்ஷாவின் கேளிக்கை விடுதியின் மீதான வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் தொடர்புடைய ஒருவரை தில்லி சிறப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சண்டிகரில் பிரபல ராப் பாடகரான பாட்ஷாவுக்கு சொந்தமான கேளிக்கை விடுதியின் மீது கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதியன்று சிறியளவிலான வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்துடன், அப்போது செக்டார் 26 பகுதியில் அமைந்திருந்த மேலும் ஒரு கேளிக்கை விடுதியின் மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் பஞ்சாபின் ஃபரித்கோட் பகுதியைச் சேர்ந்த தீபக் எனும் நபரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைதான தீபக் கனடாவைச் சேர்ந்த குற்றவாளிக் குழுவின் தலைவரான கோல்டி பிரார் என்பவருடன் தொடர்பில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாட்ஷாவின் கேளிக்கை விடுதியின் மீதான தாக்குதலுக்கு கோல்டி பிரார்தான் காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளதால், கைது செய்யப்பட்ட தீபக்கிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: தெலங்கானாவை வெளுத்து வாங்கும் கனமழை! மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட்!