Coolie: எங்கும் 'கூலி' ரிலீஸ் கொண்டாட்டம்!; கேஸுவலாக பெங்களூரு ரோடு டிரிப் போன ...
ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் ஆக.21 ஆம் தேதியன்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து உரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜெய் லாவ்ரோவை வரும் ஆக.21 ஆம் தேதி நேரில் சந்தித்து உரையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்தச் சந்திப்பானது மாஸ்கோவில் நடைபெறும் எனவும், இதில் சர்வதேச கட்டமைப்புகளுக்கு உட்பட்டு இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள் குறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில், ரஷியா சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அந்நாட்டின் அதிபர் விளாதிமீர் புதின், துணை பிரதமர் டெனிஸ் மண்டுரோவ் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் செர்ஜெய் ஷொய்கோ ஆகியோரை நேரில் சந்தித்து உரையாடினார்.
முன்னதாக, ரஷியாவுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடுவதால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!