Coolie: ``இந்த மகத்தான மைல்கல்லுக்கான ஒரே ஒருவர் ரஜினி மட்டுமே" - வாழ்த்திய நடிக...
ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!
ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு சிங்பம் மாவட்டத்தில், துகுனியா, பொசைடா மற்றும் தும்பகரா ஆகிய பகுதிகளில் இன்று (ஆக.13) காலை 6 மணி அளவில் பாதுகாப்புப் படையினர், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதிகளில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதுடன் இருதரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை துவங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதலில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும், அவரிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சுதந்திர நாளை முன்னிட்டு, கொல்ஹான் பகுதியில் மிகப் பெரியளவிலான தாக்குதலை நடத்த மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஒன்றுக்கூடியுள்ளதாக, மேற்கு சிங்பம் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!