உழவா்கரை தொகுதியில் ரூ.77 லட்சம் மதிப்பில் பாலம் கட்ட பூமி பூஜை
2.70 முறை அதிக சந்தா பெற்ற ப்ளூஸ்டோன் ஜூவல்லர்ஸ் ஐபிஓ!
புதுதில்லி: ப்ளூஸ்டோன் ஜூவல்லரி அண்ட் லைஃப்ஸ்டைல் லிமிடெட்டின் அதன் முதன்மை பிராண்டான 'ப்ளூஸ்டோன்' கீழ் தனது ஆரம்ப பொதுச் சலுகை பங்கு விற்பனையின் இறுதி நாளில் 2.70 முறை அதிக சந்தா பெற்றதாக தெரிவித்துள்ளது.
ரூ.1,540.65 கோடி மதிப்புள்ள ஆரம்ப பங்கு விற்பனையில் 4,46,20,386 விண்ணப்பத்திற்கு 1,65,14,421 பங்குகள் விற்பனைக்கு வந்ததாக தெரிவித்துள்ளது என்.எஸ்.இ. தரவு.
தகுதிவாய்ந்த நிறுவனத்திடமிருந்து 4.28 மடங்கு சந்தாவைப் பெற்ற நிலையில், சில்லறை தனிநபர் முதலீட்டாளர்களிடமிருந்து 1.35 மடங்கு சந்தாவைப் பெற்றது. இருப்பினும் நிறுவனம் சாரா முதலீட்டாளர்களிடமிருந்து 55 சதவிகித சந்தாவைப் பெற்றது.
ப்ளூஸ்டோன் ஜூவல்லரி அண்ட் லைஃப்ஸ்டைல் நிறுவனமானது முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.693 கோடிக்கு மேல் திரட்டியுள்ள நிலையில், இந்த வெளியீட்டின் மூலம் பங்கு ஒன்றுக்கு ரூ.492 முதல் ரூ.517 என்ற விலை வரம்பைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
புதிய வெளியீட்டிலிருந்து கிடைக்கும் வருமானம் அதன் செயல்பாட்டு, தேவைகள் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காக நிதியளிக்கப் பயன்படுத்தப்படும் என்றது.
இதையும் படிக்க: முத்தூட் ஃபைனான்ஸ் லாபம் ரூ.1,974 கோடியாக உயர்வு!