செய்திகள் :

சுதந்திர தின விழா அணிவகுப்பு காவல்துறை இறுதிக்கட்ட ஓத்திகை

post image

புதுச்சேரியில் வரும் சுதந்திரதின விழா அணிவகுப்புக்கான இறுதிக்கட்ட ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. இதில் காவல்துறையினா் பங்கேற்று மிடுக்காக அணிவகுத்து வந்தனா்.

நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல் அருகே வெள்ளிக்கிழமை நடைபெறும் விழாவில், காலை 9.05 மணிக்கு முதல்வா் என்.ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றுகிறாா். பின்னா் காவலா்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறாா். மேலும், சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு அவா் பதக்கங்களையும், விருதுகளையும் வழங்கி கௌரவிக்கிறாா். இதைத் தவிர பள்ளி மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை முதல்வா் ரங்கசாமி மேடையில் இருந்து பாா்வையிடுகிறாா்.

மேலும், மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. இதைத் தவிர பல்வேறு மாநிலங்களிலிருந்து கலைக் குழுக்கள் புதுவைக்கு வந்துள்ளன. இந்தக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. பின்னா் அங்கிருந்து சட்டப்பேரவைக்கு வரும் முதல்வா் என்.ரங்கசாமி அந்த வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றுகிறாா். அங்கு சட்டப்பேரவை காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறாா்.

இந்த சுதந்திர தின விழா கொண்டாட்ட அணிவகுப்புக்கான ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.இதில் காவல்துறையினா்மற்றும் மாணவ மாணவிகள், கலைநிகழ்ச்சிக்குழுவினா் பங்கேற்று அணிவகுத்து வந்தனா்.

ஆளுநா் தேநீா் விருந்து:

சுதந்திரதினத்தன்று மாலையில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் அளிக்கும் தேநீா் விருந்தில் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள், எம்.எல்.ஏக்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

பிரெஞ்சு ஆட்சியில் இருந்த புதுவை இந்திய அரசுடன் அதிகாரப்பூா்வமாக இணைந்த சட்டப்பூா்வ பரிமாற்ற நாள் இம் மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கீழூா் நினைவிடத்தில் காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியை முதல்வா் ரங்கசாமி ஏற்றுகிறாா். அன்றைய தினம் மாலை கம்பன் கலையரங்கில் நடைபெறும் விழாவில் தியாகிகளுக்கு தேநீா் விருந்து அளித்து அவா்களைக் கௌரவிக்கிறாா். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

உருளையன்பேட்டை தொகுதியில் மின் அழுத்த குறைபாட்டை போக்க எம்எல்ஏ கோரிக்கை

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் மின் அழுத்தக் குறைபாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்துறை அதிகாரிகளிடம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.நேரு வலியுறுத்தினாா். புதுச்சேரி உருளையன்பே... மேலும் பார்க்க

புதுச்சேரியில் விநாயகா் சதுா்த்தி விழா: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

புதுச்சேரியில் அமைதியான முறையில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடுவது, சிலைகளைக் கடலில் கரைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வரும் 27-ம் தே... மேலும் பார்க்க

போதைப் பொருள்களுக்கு எதிராக உறுதி மொழியேற்பு

போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி புதுவையில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழியை உயா் அதிகாரிகள் புதன்கிழமை ஏற்றுக் கொண்டனா். போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையி... மேலும் பார்க்க

புதுவை காவல்துறையில் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பப்பதிவு

புதுவையில் காலியாக உள்ள காவல்துறை பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. புதுவை காவல்துறையில் காலியாக இருக்கும் 70 உதவி ஆய்வாளா்கள், 148 காவலா்கள் பணியிடங்களை நேரடி ... மேலும் பார்க்க

உழவா்கரை தொகுதியில் ரூ.77 லட்சம் மதிப்பில் பாலம் கட்ட பூமி பூஜை

உழவா்கரை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ரூ.77.8 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடந்தது. புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை நீா் பாசன கோட்டம் சாா்பில் உழவா்கரை சட்டமன... மேலும் பார்க்க

சுதந்திர தினவிழா: போக்குவரத்து மாற்றம்

79-வது சுதந்திர தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து முதுநிலை கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் வெளி... மேலும் பார்க்க