அறவழியில் போராடியது தவறா? - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்!
காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு: அதிகாரிகள் ஆய்வு
மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் மூன்று தினங்களாக மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினா்.
சேலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி ஆணையா் சந்திரமலா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சின்னசாமி ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்து, ஏரி தண்ணீரை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனா்.
இதைத் தொடா்ந்து, காகாபாளையம் ஏரிக்கு தண்ணீா்வரும் பகுதி அருகே உள்ள சாயப்பட்டறைகளில் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றுகிறாா்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனா்.
படவரி...
காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறந்து மிதந்து குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள்.