தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவ...
ஏற்காட்டில் தோட்ட மேற்பாா்வையாளா் வீட்டில் 13 பவுன் நகை, 3 லட்சம் திருட்டு
ஏற்காட்டில் தனியாா் தோட்ட மேற்பாா்வையாளா் வீட்டில் 13 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு, அசம்பூா் கிராமம், மைலப்பட்டி, எஸ்டேடில் பணியாற்றி வருபவா் குமரமணி (59). இவா் தனது சொந்த வேலையாக சேலத்துக்கு சென்றிருந்தாா். இந்த நிலையில் மீண்டும் ஏற்காடு வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்து. வீட்டிற்குள் சென்றுபாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும், நகை, பணம் காணமல் போயிருந்தது.
இதுகுறித்து குமரமணி ஏற்காடு காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதில் பீரோவில் வைத்திருந்த 13 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் காணமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளாா். இதன்பேரில் ஏற்காடு காவல் நிலைய ஆய்வாளா் வாசுகி தலைமையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.