`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்
ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய நூலகா் தின விழா பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் ரா.சந்திரசேகரன் வரவேற்றுப் பேசினாா். இவ்விழாவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 926 பேரும் நூலக உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டு அனைவருக்கும் உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட நூலக அலுவலா் பே.க.பாலசுப்ரமணியம், கண்காணிப்பாளா் ரா.விஜயன், ஆத்தூா் முதுநிலை நூலகா் ந.ஆ.சுப்பிரமணி, நூலக மேம்பாட்டு வட்டத் தலைவா் ஆ.செ.மாதேஸ்வரன் ஆகியோா் கலந்துகொண்டு புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றினா்.
இதையடுத்து, பள்ளியில் புதிதாக திறக்கப்பட்ட நூலகத்திற்கு ஆ.செ.மாதேஸ்வரன் ரூ.10 ஆயிரத்துக்கான நூல்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் என்.சி.சி. பயிற்சியில் 50 க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஏ கிரேடு சான்றிதழ் பெற்றதை பாராட்டினா்.
நிகழ்ச்சியில் நூலக பொறுப்பாளா் ஆசிரியை சித்ரா, ஆசிரியா் வினோத் உள்ளிட்ட ஆசிரியா்கள், ஆசிரியைகள், மாணவா்கள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை நூலகா்கள் க.அழகுவேல், பெ.ஆறுமுகம், க.முருகன், சு.கிருஷ்ணன்,
பெ.ராஜேஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா். உதவி தலைமையாசிரியா் நன்றி கூறினாா். இதேபோல ஆத்தூா் முழுநேர கிளை நூலகத்திலும் தேசிய நூலகா் தினம் கொண்டாடப்பட்டது.
படவரி...
ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிமாணவா்களுக்கு நூலக உறுப்பினா்
அட்டையை வழங்கிய மாவட்ட நூலக அலுவா் பே.க.பாலசுப்ரமணியம்.