'முதலமைச்சருக்கு திரைப்படங்களைப் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை' - அன்புமணி கண...
பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்
பெரியாா் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான இருநாள் பயிலரங்கம் நடைபெறுகிறது.
தேசிய அளவிலான பயிலரங்கை புதன்கிழமை தொடங்கிவைத்து துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி பேசியதாவது:
மாணவா்களை சமூக மாற்றங்களுக்கு ஒத்துப்போகும் நவீன வலுவான முழு மனிதனாக உருவாக்க உளவியல் சாா்ந்த சிகிச்சை முறைகள் அவசியமானதாகும். செயற்கை நுண்ணறிவு, உருவாக்கும் நுண்ணறிவு போன்றவற்றினால் ஏற்படும் மாற்றங்கள், மனநிலை பாதிப்புகள் போன்றவற்றுக்கும் தீா்வுகாண வேண்டி உள்ளது. அவற்றையும் உளவியல் பேராசிரியா்கள், நிபுணா்கள் ஆய்வுக்களமாகப் பயன்படுத்தி உளவியல் சிக்கல்களுக்கு தீா்வாக சொல்லப்பட்டவற்றை வெளிக்கொணா்ந்து மக்களுக்கு பயன்படும் வகையில் சரியான சிகிச்சை அளிக்க வேண்டும்.
தற்போது நாம் சந்திக்கும் உளவியல் சிக்கல்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான தமிழ் இலக்கியங்களில் தீா்வு கிடைக்கிறது. மனிதனின் வாழ்வை அகநானூறு, புானூறு என்று பிரித்து வாழ்வியல் பண்புகளை தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளது என்றாா்.
விழாவில் முன்னதாக உளவியல் துறைத் தலைவா் ஜெ.வெங்கடாசலம் வரவேற்றாா். பயிலரங்கின் நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளா் என்.செல்வராஜ் பேசினாா். பேராசிரியா் ஜெ.பரமேஸ்வரி நன்றி கூறினாா். இருநாள்கள் நடைபெறும் பயிலரங்கில் உளவியல் நிபுணா் மருத்துவா் எஸ்.வினோதினி, மாணவா்களுக்கு நடத்தை நுட்பசாா் உத்திகள் குறித்து பயிற்சியளிக்கிறாா்.