தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?
சுதந்திர தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் 23 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருவோருக்கு குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது, குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், விருதுக்கு தேர்வானவர்களின் பட்டியலை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது.
2025 ஆண்டுக்கான குடியரசு தலைவர் விருதுகளுக்கு நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புப் படை, ஆயுதப் படை, காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை உள்ளிட்ட துறைகளில் இருந்து மொத்தம் 1,090 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், தமிழக காவல்துறையைச் சேர்ந்த 21 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தகைசால் விருது
ஏடிஜிபி பால நாக தேவி, ஐஜி ஜி. கார்த்திகேயன், ஐஜி எஸ். லட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாராட்டத்தக்கப் பணிக்கான விருது
எஸ்பி ஏ. ஜெயலட்சுமி, துணை ஆணையர் ஆர். சக்திவேல், எஸ்பி எஸ். விமலா, டிஎஸ்பி பி. துரைபாண்டியன், ஏஎஸ்பி பி. கோபாலசந்திரன், ஏஎஸ்பி கே. சுதாகர் தேவசகாயம், டிஎஸ்பி சி. சந்திரசேகர், உதவி ஆணையர் எஸ். கிறிஸ்டின் ஜெயசில், உதவி ஆணையர் எஸ். முருகராஜ், டிஎஸ்பி எம். வேல்முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், ஆய்வாளர்கள் பி. பொன்ராஜ், ஜே. அதிசயராஜ், பி. ரஜினிகாந்த் எம். ரஜினிகாந்த், ஆர். நந்தகுமார், பி. ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் எஸ். ஸ்ரீவித்யா, சி. அனந்தன், பி. கண்ணுசாமி, எஸ். பார்த்திபன், என். கணேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாராட்டத்தக்கப் பணிக்கான விருது (தீயணைப்பு துறை)
தமிழக தீயணைப்புத் துறையைச் சேர்ந்த இருவர் பாராட்டத்தக்கப் பணிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் தில்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர நாள் நிகழ்ச்சியின்போது குடியரசு தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கி கெளரவிப்பார்.