தூய்மைப் பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
விஜயகாந்த் கட்டிய மேம்பாலத்தில் விழுந்து வணங்கிய பிரேமலதா
கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் தொகுதியில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்டிய மேம்பாலத்தை விழுந்து வணங்கினார் பிரேமலதா.
தமிழகம் முழுவதும் தேமுதிகவின் பிரசாரத்தை முன்னெடுக்கும் வகையில், மக்களைத் தேடி ரத யாத்திரையை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கினார். அன்றைய தினம், திருப்பத்தூரில் வேனில் சென்றபடி மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டார்.
தொடர்ச்சியாக, சேலம் மாவட்டம் கெங்கவல்லி, மேட்டூர் சதுரங்காடி, தருமபுரியில் பல்வேறு இடங்களிலும் பிரேமலதா கடந்த ஒரு சில நாள்களாக பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
இன்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போத, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது கட்டிய மேம்பாலத்துக்கு அருகே வந்ததும், வாகனத்தில் இருந்து இறங்கி, மேம்பாலத்தில் விழுந்து வணங்கினார். இதனைப் பார்த்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.