பாஜக சொன்ன வயநாடு வாக்குத் திருட்டு! அது முகவரியே அல்ல; காங்கிரஸ் அதிரடி
`தொழிலதிபரிடம் ரூ.75 கோடி மோசடி' - நடிகை ஷில்பா ஷெட்டி மீது FIR பதிவு செய்த காவல்துறை
நடிகை ஷில்பா ஷெட்டி - அவரின் கணவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் மும்பையில் வாழ்ந்து வருகிறார்.
தீபக் கோத்தாரி என்ற தொழிலதிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், ``லோட்டஸ் கேபிடல் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் நடத்தி வருகிறேன். என் நிறுவனத்தில் கடன் முகவராகப் பணிபுரிந்தவர் ராஜேஷ் ஆர்யா நடிகை ஷில்பா ஷெட்டி என் நிறுவனத்தில் கடன் பெற விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும் ஷில்பாவை தனக்கு நன்றாக தெரியும் என்றும் கூறினார்.

அதன் அடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டியையும், அவரின் கணவர் ராஜ் குந்த்ராவையும், நான் சந்திக்க ராஜேஷ் ஆர்யா ஜூஹுவில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார். அங்கு வந்த நடிகை ஷில்பாவும், ராஜ் குந்த்ராவும் அவர்களிடம் வீட்டு, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆன்லைன் சில்லறை விற்பனை தளமான பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் போன்றவைகள் இருப்பதாகக் கூறினர். மேலும், இந்த சொத்துகளில் ஷில்பா ஷெட்டி நிறுவனத்தில் 87.61 சதவிகித பங்குகளை வைத்திருந்ததாகக் கூறினார்கள்.
எனவே, இருவரும் 12 சதவிகித வட்டியில் ரூ.75 கோடி கடன் கேட்டார்கள். நானும் கடனளிக்க ஒப்புக்கொண்டேன். அதே நேரம், மொத்தப் பணமும் நேரடியாக வழங்கினால் வரி விதிப்பு அதிகமாக இருக்கும் எனவும், அதனால் அவர்களின் நிறுவனத்தில் முதலீடு செய்வதுபோல மூன்று பகுதியாக பணத்தை வழங்கவும் கேட்டுக்கொண்டார்கள்.
அதன்படி, ஏப்ரல் 2015-ல் பங்கு சந்தை ஒப்பந்தத்தின் கீழ் ரூ.31.95 கோடி, செப்டம்பர் 2015-ல் துணை ஒப்பந்தத்தின் கீழ் ரூ.28.53 கோடி என தொடர்ந்து பணம் வழங்கினேன்.

இந்த நிலையில்தான் 2016-ம் ஆண்டு பெஸ்ட் டீல் டிவியின் இயக்குநர் பதவியை ஷில்பா ராஜினாமா செய்ததாக எனக்கு மின்னஞ்சல் வந்தது. காரணங்களைக் கேட்டபோது திருப்திகரமான பதிலை வழங்கவில்லை.
2017-ம் ஆண்டில் நிறுவனத்திற்கு எதிராக திவால் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது என்பதைக் கண்டுபிடித்தேன். எனவே, என் பணத்தை மீட்க பலமுறை முயன்றும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே, என் பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் புதன்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட தொகை ரூ.10 கோடியைத் தாண்டியதால் வழக்கு EOW-க்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...