செய்திகள் :

பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிடுக: உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: பிகாரில் சிறப்பு திருத்த முறையால் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, காரணங்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் அடையாளத்தை ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும், ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்குள் அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.

பிகாரில் சிறப்புத் திருத்த முறைக்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் ஆதார் அட்டையுடன் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை, செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம், நீக்கப்பட்டதற்கான காரணங்களுடன், மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் விண்ணப்பிக்கும் முறை, எளிய மக்களும் பயன்பெறும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

முன்னதாக, இறந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு முன்பு, ஏன் அதை பொது வெளியில் வெளியிடவில்லை என்று தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.

இந்த நிலையில்தான், 65 லட்சம் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட்டுள்ளது. மேலும், பிகாரில் மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார்? யார்? என்னென்ன காரணங்களுக்காக நீக்கப்பட்டனர் என்றும் கேட்டிருக்கிறது. 4 நாள்களில் இணையதளத்தில் வெளியிடுமாறு உத்தரவிட்டு, பிகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த முறை மேற்கொள்வதை எதிர்த்த மனு மீதான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ஜம்மு -காஷ்மீர் மேகவெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய 2 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலி!

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பில் 2 சிஐஎஸ்எஃப் உள்பட பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு! 120 பேர் மீட்பு!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோரது எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தின், சஸோட்டி எனும் ... மேலும் பார்க்க

பாஜக சொன்ன வயநாடு வாக்குத் திருட்டு! அது முகவரியே அல்ல; காங்கிரஸ் அதிரடி

பாஜக சொன்ன வயநாடு வாக்குத் திருட்டுப் புகாரில், அது முகவரியே அல்ல, ஒரு பகுதியின் பெயர். பாஜகவின் பொய், வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் வயநாடு த... மேலும் பார்க்க

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரிவிதிக்கும் அமெரிக்கா எச்சரிக்கை! ஏன்?

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்... மேலும் பார்க்க

இந்த ஆதாரமே பொய்! - சோனியா காந்தியின் வாக்குரிமை பற்றி காங்கிரஸ் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்குரிமை பெற்றதாக பாஜக கூறிய குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு! 12 பேர் பலி!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி சுமார் 12 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் 9,500 அ... மேலும் பார்க்க