புச்சி பாபு தொடர்: மகாராஷ்டிர அணியில் ருதுராஜ், பிரித்வி ஷா!
இந்த ஆதாரமே பொய்! - சோனியா காந்தியின் வாக்குரிமை பற்றி காங்கிரஸ் விளக்கம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்குரிமை பெற்றதாக பாஜக கூறிய குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு வாக்குத் திருட்டு நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதற்கான ஆதாரங்களையும் தரவுகளையும் வெளியிட்டு வருகிறார்.
இதற்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் மறுப்பும் தெரிவித்துள்ளது.
அதேபோல பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் இந்திய குடியுரிமை பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே, வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றிருப்பதாக பாஜக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.
1980 ஆம் ஆண்டு சோனியா காந்தி இத்தாலி குடிமகளாக இருந்தபோது அதாவது இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்துள்ளதாகவும் இது சட்டத்திற்கு புறம்பானது எனவும் பாஜக தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா அதற்கான ஆதாரத்தையும் சேர்த்து வெளியிட்டார். இதுகுறித்து பாஜகவினர் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இந்த ஆதாரம் பொய்யானது என காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு தலைவர் சுப்ரியா ஸ்ரீனேட் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"போலிச் செய்திகளைப் பரப்புபவர்,
1991 ஆம் ஆண்டின் 69-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாக தில்லி யூனியன் பிரதேசம்(Union Territory of Delhi), 'தேசிய தலைநகர் பகுதி'(National Capital Territory) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது 1992 பிப்ரவரி 1ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
1980-ல் இது தில்லி யூனியன் பிரதேசமாக இருந்தது.
1992-க்குப் பிறகே தில்லியில் சிறப்பு நிர்வாகம், சட்டமன்றம், அமைச்சர்கள் குழு உருவானது.
நீங்கள் தொடர்ச்சியாக பொய்களை பரப்புபவர்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.
Fake news peddler,
— Supriya Shrinate (@SupriyaShrinate) August 14, 2025
Union Territory of Delhi was renamed National Capital Territory (NCT) of Delhi by the 69th Constitutional Amendment of 1991. This came into effect on Feb 1, 1992.
In 1980 it was Union Territory of Delhi.
After 1992 Delhi got Spl admin, Legislative Assembly… https://t.co/vWsk36VGxM
Congress mocks BJPs Sonia Gandhi voter row, calls it good photoshop
இதையும் படிக்க | குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளர் ஆனது எப்படி? பாஜக கேள்வி