செய்திகள் :

டேவிட் வார்னரின் அலைச்சறுக்குப் பலகை விமர்சனத்துக்கு ஜோ ரூட் பதிலடி!

post image

ஆஷஸ் தொடருக்காக டேவிட் வார்னரின் விமர்சனத்துக்கு ஜோ ரூட் “இதெல்லம் புதியதா என்ன? இன்னும் 100 நாள்கள் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதும் ஆஷஸ் தொடர் இந்தாண்டு நவ.21-இல் பெர்த் திடலில் மோதுகிறது.

டெஸ்ட்டில் 13,000 ரன்களை கடந்த ஜோ ரூட் ஆஸ்திரேலியாவில் ஒரு சதம்கூட அடித்ததில்லை என்ற புள்ளி விவரம் அதிர்ச்சி அளிக்கிறது.

அலைச்சறுக்குப் பலகை விமர்சனம்

சமீபத்தில் டேவிட் வார்னர், “ரூட்டுக்கு எதிராக ஹேசில்வுட் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதனால், ரூட் தனது முன்னங்காலில் இருக்கும் அலைச்சறுக்குப் பலகையை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இதற்குப் பதிலளித்த ஜோ ரூட் பேசியதாவது:

ஜோ ரூட் பதிலடி

சிலர் போட்டியை எப்படி பார்க்கிறார்கள், நேர்காணலில் எப்படி பேசுகிறார்கள் எனத் தெரியாது. எதுவும் புதியதில்லை.

தலைப்புச் செய்திகளை உருவாக்கி இதை பெரிய தொடராக்க முயற்சிக்கிறார்கள். இது எதையுமே மாற்றாது.

கடைசி சில தொடர்களில் பலவிதங்களில் கவனச்சிதறல்கள் ஏற்படுகின்றன.

இந்தமுறை தொடரை மகிழ்ச்சியுடன் விளையாட இருக்கிறேன். ஆஸி. அழகான நாடு. கிரிக்கெட் விளையாட உகந்தது. 150 டெஸ்ட் போட்டிகளை விளையாடிவிட்டுச் செல்கிறேன்.

இன்னும் 100 நாள்கள் இருக்கையில் நான் மிகவும் தயாராக இருக்கிறேன் என்றார்.

Joe Root responded to David Warner's criticism of the Ashes series by saying, "What's new? There are still 100 days."

புச்சி பாபு தொடர்: மகாராஷ்டிர அணியில் ருதுராஜ், பிரித்வி ஷா!

புச்சி பாபு தொடருக்கான மகாராஷ்டிர அணியில் ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் நடைபெறும் அகில இந்திய புச்சி பாபு கிரிக்கெட் போட்டிக்கான மகாராஷ்டிர அணியின் 17 ப... மேலும் பார்க்க

டி20 உலகக் கோப்பை: பவர்பிளேவில் பந்துவீச தயாராகும் மேக்ஸ்வெல்!

டி20 உலகக் கோப்பை 2026-இல் பவர்பிளேவில் பந்துவீச மேக்ஸ்வெல் தயாராகி வருகிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த க்ளென் மேக்ஸ்வெல் (36 வயது) சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆல... மேலும் பார்க்க

தி ஹன்ட்ரட்: கடைசி பந்தில் சிக்ஸர்... வைரலாகும் விடியோ!

தி ஹன்ட்ரட் லீக்கில் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவையான நிலையில் சிக்ஸர் அடித்து அசத்திய கிரஹாம் க்ளார்க் விடியோ வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் தி ஹன்ட்ரட் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ... மேலும் பார்க்க

அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம்! மணப்பெண் யார்!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.25 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரில் 2... மேலும் பார்க்க

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்துவோம்: ஸ்காட் போலாண்ட்

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என நம்புவதாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலாண்ட் தெரிவித்துள்ளார்.இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்... மேலும் பார்க்க

பேபி ஏபிடியா? அசலான டெவால்டு பிரெவிஸாக இருக்க சபதம்!

இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்டு பிரெவிஸ் தான் அசலான பிரெவிஸாக இருக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் ரசிகர்கள் இவரை ’பேபி ஏபிடி’ என அழைகிறார்கள். முன்னாள் தெ.ஆ. வீரர் ஏபிடியைப் போலவே... மேலும் பார்க்க