Kerala: 3.5 சவரன் தங்க செயினை தூக்கிக்கொண்டு பறந்த காகம்; தேடிச்சென்று மீட்ட பொத...
அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம்! மணப்பெண் யார்!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
25 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரில் 2021 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால், 5 முறை மட்டுமே இவருக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல் தரப் போட்டியில் கோவா அணிக்காக 2022ஆம் ஆண்டு அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர், முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார்.
இந்த நிலையில், அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளான சானியா சந்தோக்கிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
மிகவும் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்வாக நடைபெற்றுள்ளது.
யார் இந்த சானியா சந்தோக்?
மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவி காய் என்பவரின் பேத்திதான் சானியா சந்தோக். கிராவிஸ் குழுமத்தின் தலைவராக உள்ள ரவி காய், தி புரூக்ளின் க்ரீமரி மற்றும் பாஸ்கின் ராபின் ஆகிய பிரபல ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர். இவரின் தந்தைதான் குவாலிட்டி ஐஸ்கிரீம் பிராண்டின் நிறுவனர்.
லண்டன் ஸ்கூள் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டம் பெற்ற சானியா, கால்நடை தொழில்நுட்பத்தில் டிப்ளோமா படித்துள்ளார். மும்பையில் உள்ள பாவ்ஸ் பெட் ஸ்பா அண்ட் ஸ்டோர் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.