செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின்! முதல்வரின் பெயருக்கு தடை கோரியவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்!

post image

சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை கோரிய பொதுநல வழக்கை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், அதிமுக வழக்குரைஞர் இனியன், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடை கோரி பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

முன்னதாக, அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வாழும் ஆளுமைகளின் பெயர்களை அரசு திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.

ஆனால், 'உங்களுடன் ஸ்டாலின்', 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டங்களை அதே பெயரில் செயல்படுத்த அனுமதி கோரி அரசுத் தரப்பில் திருத்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சி.வி.சண்முகம் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சி.வி.சண்முகத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் திருத்த மனு, அதிமுக வழக்குரைஞர் இனியன் தாக்கல் செய்த மனுக்கள், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் மற்றும் திமுக தரப்பு மூத்த வழக்குரைஞர் பி. வில்சன் ஆகியோர், இதே கோரிக்கையுடன் சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்த உத்தரவு நகலை தாக்கல் செய்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சி.வி.சண்முகம், 10 லட்சம் ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டதாக, தலைமை வழக்குரைஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து, வழக்குரைஞர் இனியனின் மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The Madras High Court has dismissed a public interest litigation seeking a ban on the use of the Chief Minister's name in the 'Ungaludan Stalin' project, along with a fine of one lakh rupees.

இதையும் படிக்க : தெரு நாய்களை அப்புறப்படுத்த இடைக்காலத் தடை இல்லை: தீர்ப்பு ஒத்திவைப்பு!

இபிஎஸ்ஸுக்கு தலைமைப் பண்பு இல்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைப் பண்பு இல்லை என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அனை... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களுக்கு அரசின் சிறப்புத் திட்டங்கள்: முழு விவரம்!

தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள சிறப்புத் திட்டங்கள் குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று(வியாழக்கிழமை... மேலும் பார்க்க

1000 பேருக்கு வேலை: மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ரூ. 700 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 1000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கோகி ஹோல்டிங்-ன் துணை நிறுவனமான ஹிகோகி பவர் டூல்ஸ் நிறுவனம், செங்கல்பட்டு ம... மேலும் பார்க்க

தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு!!

நாளை சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதால், ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான தேதி நெருங்கிவிட்டது.இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்... மேலும் பார்க்க

சுதந்திர நாள்: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

சுதந்திர நாள் விடுமுறையையொட்டி நாளை(ஆக. 15) சென்னை மெட்ரோ ரயில் சேவை மாற்றப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்... மேலும் பார்க்க

ஏலகிரி மலைமக்களுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் கொட்டையூர் மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடினார்.அதிமுக ஆட்சி அமை... மேலும் பார்க்க