Kerala: 3.5 சவரன் தங்க செயினை தூக்கிக்கொண்டு பறந்த காகம்; தேடிச்சென்று மீட்ட பொத...
சுதந்திர நாள்: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
சுதந்திர நாள் விடுமுறையையொட்டி நாளை(ஆக. 15) சென்னை மெட்ரோ ரயில் சேவை மாற்றப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சுதந்திர நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஆக. 15), ஞாயிற்றுக்கிழமை அட்டவணை பின்பற்றப்படும்.
மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கீழ்கண்ட கால இடைவெளியில் அடிப்படையில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
On account of Independence Day on 15-08-2025 (Friday).
— Chennai Metro Rail (@cmrlofficial) August 14, 2025
Sunday Timetable will be followed tomorrow (15-08-2025).
Metro Train service will operate from 05:00 hrs to 23:00 hrs with the following frequency:
Peak Hours (12:00 hrs - 20:00 hrs) headway : Metro trains will be available…
அதன்படி, பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துங்கள்..! யுஇஎஃப்ஏ கண்டனம்!