தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்: `அரசின் கதவு எப்போதுமே திறந்திருக்கிறது..!' - தங்...
`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்பட்ட பெண் நெகிழ்ச்சி
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை பகுதியைச் சேர்ந்த திலீப் என்பவர் மனைவி யமுனா (வயது 54). பெட்டிக்கடையில் வைத்து லட்டரி சீட்டு மற்றும் வெற்றிலை வியாபாரம் செய்துவந்தார். வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மூலிகை மருந்துகள் எடுப்பதற்காக பைக்கில் சென்றார். பின்னர் ஒரு ரப்பர் தோட்டத்திற்குள் சென்றார். அங்கு, மூலிகளை தேடியபடியே சென்ற அவர் பக்கச்சுவர் கட்டப்படாமல் பாழடைந்து கிடந்த 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
இதற்கிடையே வீட்டை விட்டு சென்ற யமுனாவை நீண்ட நேரமாக காணாததால் வீட்டில் உள்ளவர்கள் அப்பகுதியில் தேடிச் சென்றனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கொட்டாரக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தியதில் கொட்டாரக்கரை உக்ரன்குந்நு பகுதியில் யமுனாவின் ஸ்கூட்டர் நின்றதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையட்டுத்து அப்பகுதியில் போலீஸார் தேடயும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இரவு நேரத்தில் ரப்பர் தோட்டர்ருக்குள் யமுனாவின் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. சத்தம் வந்த திசையில் சென்ற போலீஸார் கிணற்றுக்குள் யமுனா கிடப்பதை கண்டுபிடித்தனர். இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறை வீரர்கள் அங்கு சென்று கயிறு மூலம் கிணற்றில் இறங்கி, வலைகள் மூலமாக யமுனாவை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். காலை 11:30 மணி அளவில் கிணற்றுக்குள் விழுந்தவரை இரவு இரவு 11:30 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

இதுகுறித்து யமுனா கூறுகையில், "ஸ்கூட்டரில் சென்ற நான் தலையில் அணிந்திருந்த ஹெல்மெட்டுடன் மூலிகைகளை தேடினேன். விறகுகள் மற்றும் இரும்பு ஷீட்டுகளும் கொண்டு கிணறு மூடப்பட்டிருந்தது. கவனிக்காமல் நான் ஷீட்டின் மீது மிதித்ததில் கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டேன். நேராக கிணற்றில் விழுந்து பக்கவாட்டில் மோதியதில் முதுகில் அடிபட்டது. நல்லவேளை கிணற்றில் தண்ணீர் இல்லை. பலமுறை சத்தம்போட்டும் யாரும் வரவில்லை. கிணற்றுக்குள் கிடந்து இறந்துவிடுவேன் என நினைத்தேன். இப்போது எனக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது" என்றார்.