செய்திகள் :

அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிப்பு; வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு - சாத்தூரில் சோகம்

post image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுபாண்டியன் என்பவர் வீட்டில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளனர்.

அப்போது திடீரென ஏற்பட்ட உராய்வின் காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளது. இந்த வெடி விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த கீழகோதை நாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (21), விஜய கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (70), சண்முகத்தாய் (60) ஆகிய மூன்று பேர் பலியானார்கள்.

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணி

வெடி விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மாரியம்மாள் (55) என்ற பெண்ணை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்று வந்த நிலையில் இது குறித்து வருவாய் துறையினர் மற்றும் வெம்பக்கோட்டை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வனச்சரகத்திற்கு உள்பட்ட நான்காம் எண் பீட் பகுதியான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் உள்ள வருசநாடு சந்திப்பு மணிக்கட்டி பகுதியில் காட்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் தம்பதி பலி

தஞ்சாவூர் அருகே கள்ளம்பெரம்பூர் 2ம் சேத்தி மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54) விவசாயி. இவரது மனைவி ராமாயி (47) இவர்கள் இருவரும் பூதலுார் சாலையில் உள்ள தங்கள் வயலுக்கு சென்றுள்ளனர். நேற்று இரவ... மேலும் பார்க்க

விருதுநகர்: பேருந்திலிருந்து சாலையில் விழுந்த ஒரு வயதுக் குழந்தை; அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி

ஸ்ரீவில்லிபுத்தூர்நோக்கி...விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்தூர்அருகேமுத்துலிங்காபுரம்கிராமத்தைச் சேர்ந்தவர்மதன்குமார். இவர் தனது சகோதரி மற்றும் சகோதரியின் இரண்டரை வயது மற்றும் 1 வயது கைக்குழந்தைகளை அ... மேலும் பார்க்க

`உயிர் பலி வாங்கும் தொப்பூர் கணவாய்' - விபத்தை தவிர்க்க மேம்பால பணி ஆரம்பம் | Photo Album

தொப்பூர் கணவாய் மேம்பாலப்பணி ஆரம்பம்தொப்பூர் கணவாய் மேம்பாலப்பணி ஆரம்பம்விபத்தை குறைக்க மேம்பாலப்பணி ஆரம்பம் Thoppur kanavaiவிபத்தை குறைக்க மேம்பாலப்பணி ஆரம்பம் Thoppur kanavaiவிபத்தை குறைக்க மேம்பாலப... மேலும் பார்க்க

கவரப்பேட்டை: ``தண்டவாளத்தில் நட்டு, போல்ட்டுகளை கழற்றியதே ரயில் விபத்துக்கு காரணம்'' - ரயில்வே

2024-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்து உள்ள கவரப்பேட்டை பகுதியில் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அந்த எக்ஸ்பிரஸ் ரயில் மைசூரில் இருந... மேலும் பார்க்க

வயநாடு: கல்லறையில் டாய்ஸ், தின்பண்டங்கள் - கண்கலங்க வைத்த முதலாமாண்டு நினைவேந்தல் காட்சிகள்

கேரள வரலாற்றில் கருப்பு நாளாகக் கருதப்படும் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. ஜூலை 30 - ம் தேதியான நேற்று, முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு கேரள அரசு ஏற்பாடு செய்தி... மேலும் பார்க்க