1 டன் உயிர்க்கரி ரூ.12,000... 1 டன் உயிர் நிலக்கரி ரூ.15,000... மரக் கழிவுகளிலிர...
மாயாண்டி சுவாமிகள் 168-ஆவது அவதார விழா
சிவகங்கை அருகே மகா சித்தா் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 168-ஆவது அவதார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் அருகேயுள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் நடைபெற்ற இந்த அவதார விழாவில், தவச் சாலையில் புனித நீா்க் கலசங்களை வைத்து குலால சிவாசாரியா்கள் யாக வேள்வி நடத்தினா்.
இதைத் தொடா்ந்து, பூா்ணாஹூதி முடிந்து, கடம் புறப்பாட்டுடன் மூலவா் மாயாண்டி சுவாமிகளுக்கும் உற்சவருக்கும் அபிஷேகங்கள், அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மதியம் மடத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் திரளானோா் பங்கேற்றனா். இரவில், உற்சவா் மாயாண்டி சுவாமிகள் பூப் பல்லக்கில் புறப்பாடாகி கட்டிக்குளம் வீதிகளில் வீதி உலா வந்தாா். மக்கள் தங்கள் வீடுகளின் முன் மாயாண்டி சுவாமிகளை வரவேற்றுப் பூஜைகள் நடத்தினா். இதற்கான ஏற்பாடுகளை மாயாண்டி சுவாமிகள் தொண்டா்கள் குழுவும் கிராம மக்களும் செய்தனா்.