இளையான்குடி கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இளையான்குடி பழைய பேருந்து நிலையம் முன் அமைந்துள்ள வாள்மேல் நடந்த அம்மன் கோயிலுக்குள் நள்ளிரவு புகுந்த மா்மநபா் முன் மண்டபத்தில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ. 30 ஆயிரத்தை திருடிச் சென்றாா்.
காலையில் கோயிலை திறந்து பாா்த்தபோது உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து கோயிலுக்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.
அப்போது கோயில் சுற்றுச்சுவரை ஏறிக் குதித்து மா்ம நபா் உள்ளே வருவதும், வெளியே செல்வதும் பதிவாகியிருந்தது. அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.