கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
சிவகங்கை எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கண்ணன் (55). இவா் மானாமதுரை ஒன்றியம், பெரிய கோட்டையில் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டாா். அப்போது அருகே சென்ற மின் கம்பி உரசியதில், மின்சாரம் பாய்ந்து கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.