தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
சிவகங்கைக்கு சட்டப் பேரவை உறுதி மொழிக்குழு இன்று வருகை
சிவகங்கை மாவட்டத்தில் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு திங்கள்கிழமை(11.8.2025) வருகை தரவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில், 2024-2026 ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுத் தலைவா், சட்டப்பேரவை உறுப்பினா் தி.வேல்முருகன் (பண்ருட்டி தொகுதி) தலைமையிலான குழுவினா்
திங்கள்கிழமை ( ஆக.11) சிவகங்கை மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள் குறித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.
இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், அனைத்துத் துறை அரசு முதல்நிலை அலுவலா்களுடன், தமிழ்நாடு சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத் தலைவா், உறுப்பினா்கள் ஆய்வுக் கூட்டமும் நடைபெறும் என்றாா் அவா்.