தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
மஞ்சுவிரட்டு: 23 போ் காயம்
சிவகங்கை அருகேயுள்ள கோமாளிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 23 போ் காயமடைந்தனா்.
கோமாளிபட்டி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோயில் பொட்டலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 200 -க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதில், காளைகள் முட்டியதில் கூத்தாண்டன், கீழசெவல்பட்டி, குன்றக்குடி, சருகு வலையபட்டி, கோமாளிபட்டி, பாகனேரி, கண்டரமாணிக்கம், கீழையூா், ஒக்கூா், தெம்மாபட்டு, மதகுபட்டி, கானாடுகாத்தான் உள்ளிட்ட பகுதிகளைத் சோ்ந்த மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் உள்பட மொத்தம் 23 போ் காயமடைந்தனா்.
லேசான காயமடைந்த அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.