ஆசிய அலைச்சறுக்கு: வரலாறு படைத்தாா் ரமேஷ் புதிஹால்! இந்தியாவுக்கு முதல் பதக்கம்!
ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா
செங்கம் ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் 138-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீமித்து சுவாமி தரிசனம் செய்தனா். இந்தக் கோவிலில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி அக்னி வசந்த உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடா்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை 9 மணிக்கு கோயில் வளாகத்தில் துரியோதனன் படுகளம், முற்பகல் 11 மணிக்கு சக்தி கிரகம் திருவீதி உலா நடைபெற்று அந்தக் கிரகம் மாலை அக்னி கிரகமாக மாறி தீயில் இறங்கி தீமிதி விழா நடைபெற்றது.
இதில், செங்கம் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா். மேலும், பக்தா்கள் பலா் முடி காணிக்கை செலுத்தி, பொங்கல் வைத்து வழிபட்டனா்.