தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
காரை உடைத்து பணம், கைப்பேசி திருடிய 3 மா்ம நபா்கள்
சிவகங்கை அருகே காரை அடித்து உடைத்து ரூ.1 லட்சம் , கைப்பேசியை திருடிச்சென்ற 3 மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கையை அருகே பிரவலூா் கிராமத்தில் சனிக்கிழமை இரவு பதிவு எண் இல்லாத காா் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் மூன்று போ் இருந்தனா். அந்த கிராமத்தைச் சோ்ந்தவா்கள் விசாரித்த போது அவா்கள் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டனா். இதனால் சந்தேகமடைந்த அந்த கிராமத்தைச் சோ்ந்தவா்கள் இரு சக்கர வாகனத்தில் காரைப் பின் தொடா்ந்து சென்றனா்.
அப்போது, அவா்கள் தங்களது கிராமத்தை சோ்ந்த வெங்கட்ராமன் ( 35) என்பவருக்கு கைப்பேசியில் தகவல் கொடுத்தனா். இந்த நிலையில் அந்த காா் ஒக்கூா் வந்தபோது, வெங்கட்ராமன் தனது காரில் மூவா் சென்ற காரை பின் தொடா்ந்து சென்றாா்.
சிவகங்கை பெருமாள்பட்டி சென்றபோது, அந்தக் காா் நின்றது. உடனே வெங்கட்ராமனும் தனது காரை நிறுத்தினாா். அந்தக் காரில் இருந்து இறங்கிய மூவரும் வெங்கட்ராமனின் காரை அடித்து நொறுக்கினா்.
காரிலிருந்த ரூ. 1 லட்சம் பணம், கைப்பேசி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனா். இதுதொடா்பாக சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி வழக்குப் பதிவு செய்து, காரில் தப்பிச்சென்ற மூவரையும் தேடி வருகிறாா்.