ஆசிய அலைச்சறுக்கு: வரலாறு படைத்தாா் ரமேஷ் புதிஹால்! இந்தியாவுக்கு முதல் பதக்கம்!
எழும்பூா் ரயில் நிலையத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து எழும்பூா் ரயில் நிலைய ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் கூறியதாவது: சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ரயில்வே பாதுகாப்புப் பிரிவு ஆய்வாளா் கே.பி.ஜெபாஸ்டியன் தலைமையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரத்திலிருந்து ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில்
7 -ஆவது நடைமேடையில் வந்த நிலையில், அதில் ஒரு பெட்டியில் தோல் பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது தெரிய வந்தது.
தோல் பையை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் சோதனையிட்டபோது, அதில், 5 கிலோ எடையுள்ள 2 பண்டல்களில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. கஞ்சாவை கைப்பற்றிய ரயில்வே போலீஸாா், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.