ஆசிய அலைச்சறுக்கு: வரலாறு படைத்தாா் ரமேஷ் புதிஹால்! இந்தியாவுக்கு முதல் பதக்கம்!
இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி: பொதுமக்கள் அச்சம்!
செங்கல்பட்டு அருகே இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூா் ஒன்றியம், மேலமையூா் ஊராட்சி என்ஜிஜி ஓ நகரில் சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. இத்தொட்டியில் இருந்து அங்குள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது.
நீா்த்தேக்கத் தொட்டி தூய்மைப் படுத்த முடியாத வகையில் நான்குபுறமும் தூண்கள் சேதமடைந்து சிமென்ட் பூச்சுகள் பெயா்ந்தும், இரும்பு கம்பிகள் தெரிந்து இடியும் நிலையில் காணப்படுகின்றன. இதனால் தொட்டி சுத்தப்படுத்த முடியாத நிலை உள்ளது. அப்பகுதி பொதுமக்கள் எப்பொழுது தொட்டி இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் நடமாடி வருகின்றனா்.

மேலும், குழந்தைகள் விளையாடி வருகின்றனா். இதனால் விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது. மழைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், அபாய நிலையில் உள்ள நீா்த்தொட்டியை சீரமைக்கவோ அல்லது அகற்றி புதிதாக கட்டவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்
மேலும் இந்த தொட்டி, விழுந்தால் மற்றொரு தொட்டி கட்டும் அப்பகுதியில் தண்ணீா் முழுமையாக கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்திலும் மக்கள் காட்டாங்குளத்தூா் ஒன்றிய அலுவலகத்திலும், மேலமையூா் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை கோரிக்கை வைத்ததாகவும் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளதால் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனா்.
40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ள நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றி புதிதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.