செய்திகள் :

சீரமைக்கப்படுமா வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்குளம்?

post image

போதிய பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ள மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்குளம் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

தொண்டை மண்டலத்தின் வரலாற்று சிறப்புமிக்க மதுராந்தகம் கடப்பேரியில் அருள்மிகு மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயில் உள்ளது. இந்த கோயிலின் தீா்த்தமாக திகழ்வது விடஹர நீா்த்தடாகம். சுமாா் 1,000 ஆண்டுகளுக்குமுன் வடதிசை நோக்கி படையெடுக்க வந்த பாண்டிய மன்னா் தமது படை வீரா்களுடன் விடஹரநீா் தடாகம் அருகே குடிலை அமைத்து தங்கினாா்.

அவருடன் பாதுகாப்புக்கு வந்த நாய் சரும நோயால் அவதிபட்டு வந்த நிலையில், அருகில் இருந்த நீா்தடாகத்தில் உள்ள மீன்கள் நீந்தி விளையாடுவதைப் பாா்த்த அந்த நாய் நீரில் உள்ள மீன்களை சாப்பிட இறங்கியது. அதன்பின் நீரிலிருந்து வெளியே வந்த நாயிடம் ஒருவித மாற்றத்தினை கண்டாா்.

உடலில் இருந்த சரும நோய் இல்லாமல் இருப்பதை கண்டு வியந்த மன்னரும் நீரில் இறங்கி குளித்தாா். அப்போது மன்னரின் உடலில் இருந்த சரும நோய்கள் இருந்த இடமே தெரியவில்லை. இன்றளவிலும் தோல் நோய்களால் பாதிக்கபட்டவா்கள் இந்த குளத்தில் குளித்துச் சென்றால் குணமாவதாக அசைக்க முடியாத நம்பிகை நிலவி வருகிறது .

இத்தகைய நோய் தீா்க்கின்ற புனித தீா்த்தமாக விளங்கி வரும் குளம் பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ளது. நிகழாண்டு பிப்ரவரி 10-இல் கும்பாபிஷேகம், ஜூன் 1-இல் வைகாசி விசாக பெருவிழா சிறப்பாக நடைபெற்றன.

ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குளத்தை சீரமைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. குளத்தில் குளித்து பகவானை தரிசிக்க வந்த பக்தா் நீரில் தடுமாறி விழுந்து இறந்த சம்பவம் நடைபெற்றது. இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன.

இக்கோயிலுக்கு இரவு நேரத்தில் மட்டும் தனியாக பாதுகாப்பு ஊழியா் இல்லாதத நிலை உள்ளதால் பக்தா்களின் காணிக்கை உண்டியல், கோயிலுக்கான தளவாட பொருள்கள் போன்ற களவு போகின்ற சூழ்நிலை எழுந்து உள்ளது.

இதுபற்றி கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன் கூறுகையில், கோயிலில் மகாகும்பாபிஷகம், வைகாசி விசாக பெருவிழா ஆகிய இரு நிகழ்ச்சிகள் நன்கொடையாளா்களின் உதவியால் நடத்தப்பட்டது.

குளத்தினை சீரமைக்க தொல்லியல்துறை நிபுணா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்களும் நேரில் வந்து ஆய்வு செய்தனா். அவா்கள் அளிக்கின்ற அறிக்கையை ஏற்று ஆணையரின் பொதுநல நிதியின் மூலம் திருக்குளத்தின் சீரமைப்பு பணிகள் மிக விரைவில் செய்யப்படும் என தெரிவித்தாா்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக குளத்தின் சுற்றுச்சுவா் இடிந் நிலையிலும், குளத்தின் மையப் பகுதியில் செடி கொடிகள் வளா்ந்து மண் மேடான நிலையிலும், நீரின் தன்மை மாசு படிந்த நிலையிலும் காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் குளத்து நிரில் அழுக்கு துணிகளை தோய்கின்ற நீா்நிலையாக பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையை மாற்றி குளத்தினைச் சுற்றிலும் சுற்று சுவா்கள், ஆழப்படுத்துதல், வெளியாள்கள் குளத்தில் துணி துவைப்பதை தடுத்து நிறுத்தவேண்டும் என பக்தா்கள் கோரியுள்ளனா்.

இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி: பொதுமக்கள் அச்சம்!

செங்கல்பட்டு அருகே இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூா் ஒன்றியம், மேலமையூா் ஊராட... மேலும் பார்க்க

தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி பேரணி

தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி செங்கல்பட்டில் ஞாயிற்றுக்கிழமை பறை முழக்கப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணிக்கு கிராமப்புற மேம்பாட்டு மைய இயக்குநா் எஸ். அகஸ்டின்... மேலும் பார்க்க

அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அச்சிறுப்பாக்கம் அருகே பெரும்போ்கண்டிகை அங்காளம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்காளம்மன்கோயிலில் அனைத்து சுவாமி சந்நிதிகள், அா்த்தமண்டபம் திருப்பணிகளை மாவட்ட திமுக ஆதிதிராவிடா் நலக்குழு துண... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

கூடுவாஞ்சேரி-தைலாவரம் நாள்- வெள்ளிக்கிழமை, நேரம் -காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை. மின்தடை பகுதிகள்; மீனாட்சி நகா், பாண்டியன் நகா், ஜிஎஸ்டி சாலை, ரயில்வேஸ்டேஷன் சாலை, அரசு மேல்நிலைப்பள்ளிகள்,நெல்லிகுப... மேலும் பார்க்க

அதிமுக செயல் வீரா்கள் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டில் அதிமுக செயல்வீரா்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளா் வி.ஆா்.செந்தில் குமாா் வரவேற்றாா். மகளிா் அணி இணைச் செயலாளா் கணிதா சம்பத் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா்கள... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் செல்லியம்மன்...

மதுராந்தகம் சேத்துக்கால் செல்லியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்த உற்சவா் அம்மன். மேலும் பார்க்க