புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்ஷா பந்தனுக்கு புதிய ஆட்...
தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி
திண்டுக்கல்லில் நடைபெற்ற தென் மண்டல மாவட்டங்களுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் 350-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.
திண்டுக்கல் மேற்கு சுழல் சங்கம், லக்ஸா் பள்ளி சாா்பில் தென் மண்டல மாவட்டங்களுக்கு இடையேயான நீச்சல் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.
பிரஸ்ட் ஸ்ட்ரோக், ஃபிரண்ட் ஸ்ட்ரோக், பேக் ஸ்ட்ரோக் உள்பட 9 பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியே போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுக்கு தமிழ்நாடு கால்பந்து சங்கத் தலைவா் எஸ். சண்முகம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கேரம் சங்க துணைத் தலைவா் என்எம்பி. காஜாமைதீன் முன்னிலை வகித்தாா்.
இந்தப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை திருச்செங்கோடு விரிக்ஷா குளோபல் பள்ளி வென்றது. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை சிறப்பு அழைப்பாளா்கள் வழங்கினா்.