புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்ஷா பந்தனுக்கு புதிய ஆட்...
1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா: தெற்கு ரயில்வே தகவல்
சென்னையை தலைமை இடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் 1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குற்றங்களைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே உயா் அதிகாரிகள் கூறியதாவது: ரயில்களில் நிகழும் குற்றங்களைக் குறைக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை துல்லியமாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டத்தை ரயில்வே துறை செயல்படுத்தவுள்ளது.
அதன்படி, இந்திய அளவில் 74,000 ரயில் பெட்டிகளிலும், 15,000 ரயில் என்ஜின்களிலும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டுள்ள தெற்கு ரயில்வே மண்டலத்தில் 1,149 ரயில் பெட்டிகளில் கேமராக்களை பொருத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.