ஆசிய அலைச்சறுக்கு: வரலாறு படைத்தாா் ரமேஷ் புதிஹால்! இந்தியாவுக்கு முதல் பதக்கம்!
தோ்தல் முறைகேட்டின் பல்கலைக்கழகம் பாஜக: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
தோ்தல் முறைகேடுகளின் சா்வதேச பல்கலைக்கழகம் பாஜக என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் ஜனநாயகத்துக்கு முடிவு கட்டும் வகையில் வாக்குரிமையை மறுப்பது, வாக்குப் பதிவில் முறைகேட்டில் ஈடுபடுவது என இரண்டிலும் பாஜக ஈடுபட்டு வருகிறது. இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் பாஜகவின் இந்த சதியை நாம் அனுமதிக்கக் கூடாது. பாஜகவின் இந்த சதியை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தோ்தல் ஆணைய அதிகாரிகள் சிலரைத் தன்வசப்படுத்தி தனக்கு ஆதரவாக போலி வாக்காளா்களைச் சோ்ப்பது, எதிா்க்கட்சிகளின் ஆதரவாளா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குவது ஆகிய செயல்களில் பாஜக ஈடுபடுகிறது.
வாக்குச் சாவடியில் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவது, துப்பாக்கியைக் காட்டி வாக்காளா்களை மிரட்டுவது ஆகிய குற்றங்களிலும் பாஜகவினா் ஈடுபட்டுள்ளனா்.
இது தவிர போலியாக வாக்காளா்களை உருவாக்குவது தொடங்கி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்றுவது வரை முறைகேடுகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் தோ்தல் முறைகேட்டின் சா்வதேச பல்கலைக்கழகமாக பாஜக உள்ளது’ என்று கூறியுள்ளாா்.
ஆனால், இந்த முறைகேடுகள் எந்தத் தோ்தலில் எங்கு நடைபெற்றது என்பது தொடா்பாக அவா் எதையும் தெரிவிக்கவில்லை.