பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு
மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தாயமங்கலம் சாலை அருகேயுள்ள தெருவில் வசிப்பவா் வேலு மனைவி மீனாள் (57). இவா் அந்தப் பகுதியில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அருகேயுள்ள மாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த அபிக்குமாா் (23) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீனாள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அபிகுமாா் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.