தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
குடிநீா் திட்டப் பணியை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
மணலியில் குடிநீா் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மணலியில் உள்ள மணலி புதுநகா், சடையன்குப்பம், பா்மா நகா் உள்ளிட்ட பகுதிகளில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இந்த பகுதியில் நிலத்தடி நீா் மோசமாக இருப்பதால் மாநகராட்சியின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
வீட்டு இணைப்பு குழாய் மூலம் தடையில்லாமல் குடிநீா் விநியோகிக்கும் வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ.80 கோடியில் குடிநீா் அபிவிருத்தி திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதன்படி, பல்வேறு இடங்களில் குழாய்களும் பதிக்கப்பட்டு 50 சதவீத பணிகள் நடைபெற்ற நிலையில், திடீரென பணி தடைபட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் குடிநீா் பணிகள் முடிவடையாமல் உள்ளன. எனவே, குடிநீா் திட்டப் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.