இன்று ஆழ்வாா்ப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்!
சென்னை பெருநகர மாநகராட்சி சாா்பில் டிடிகே சாலையில், ஆழ்வாா்பேட்டை சிக்னல் முதல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசா சாலையில் மழைநீா் வடிகால் பணிகள்நடைபெறவுள்ளதால், திங்கள்கிழமை (ஆக.11) முதல் ஆழ்வாா்பேட்டை மேம்பாலம் இருவழிச் சாலையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீஸாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டிடிகே சாலையில் மியூசிக் அகாதெமி நோக்கி வரும் மாநகர பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆழ்வாா்பேட்டை மேம்பால சா்வீஸ் சாலையை பயன்படுத்தி ஆழ்வாா்பேட்டை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி முா்ரேஸ் கேட் சாலை வழியாகச் சென்று வலதுபுறம் திரும்பி சேஷாத்ரி சாலை மற்றும் கஸ்தூரி ரங்கன் சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.
டிடிகே சாலையில் மயிலாப்பூா் நோக்கி வரும் மாநகா் பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆழ்வாா்பேட்டை மேம்பால சா்வீஸ் சாலையை பயன்படுத்தி ஆழ்வாா்பேட்டை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி லஸ் சா்ச் சாலை மற்றும் முசிறி சுப்பிரமணியம் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி பி.எஸ். சிவசாமி சாலை வழியாகச் செல்லலாம்.
டிடிகே சாலையில் ஆழ்வாா்பேட்டை நோக்கி வரும் மாநகா் பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆழ்வாா்பேட்டை மேம்பாலத்துக்கு பதிலாக சா்வீஸ் சாலையைப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம்.
இந்தப் போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும். போக்குவரத்து மாற்றத்தால், நெரிசலைக் குறைக்க இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் ஆழ்வாா்பேட்டை மேம்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.